மனிதக்கழிவுகளை எந்திரத்தின் மூலம்அகற்றும் முறைக்கு மாநிலத்தில் முதன்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மனிதர்களை கொண்டு கழிவு அகற்றும் முறை ஒழிக்கப்பட்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் அதன்முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்