கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில்,அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 22,351 கோடி.
அதே சமயம் கொரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக் கூடும் ஆகவே கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.
இதனால் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது