தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், கீழேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் 50 % இருக்கைகளுடன் பொது போக்குவரத்து சேவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் 50% பயணிகளுடன் மெட்ரோ சேவையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்