நடிகர் விஜய்யை, திமுக ஆட்சியை தலைமை ஏற்க முதல்வர் அழைப்பது போல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் திண்டுக்கலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து கொரோனோ தடுப்பு பணி தொடங்கி பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில் விஜயை வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகரம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட ” தம்பி வா தலைமை ஏற்க வா” என மறைந்த முதல்வர் அண்ணா கலைஞரை அழைத்தது போல முதல்வர் செங்கோல் கொடுத்து திரைப்பட நடிகர் விஜயை திமுக கட்சிக்கு தலைமை தாங்க அழைப்பது போல் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றன.