அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SHARE

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள், பொருளாதார இழப்புகளை மற்றும் இடர்களை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் தலா 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளி விவரங்கள்படி, மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன.

இதில் அனைத்து வகையான பொருட்களும் பெறும் 1,84,11,633 அட்டைகளும்; 18,31,838 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குடும்ப அட்டைகளும், 3,84,626 சர்க்கரை குடும்ப அட்டைகளும், 53,864 எந்த பொருளும் வேண்டாம் என்று பெற்ற குடும்ப அட்டைகளும், 59,248 காவல் துறை குடும்ப அட்டைகளும் உள்ளன. தற்போது அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்து இருக்கும் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அரிசி பெறும் அட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய மாநில அரசு நிறுவனங்களான மின்சார வாரியம், , பி. எஸ், என், எல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித்துறையினர், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேற்படி துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பள குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வருமான இழப்பு இல்லை.அதனால், இவர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment