போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
காரில் வந்த பெண் வழக்கறிஞர் தனுஜா போலீஸாருடன் வழக்கறிஞர் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு பகுதி போக்குவரத்து போலீசார்பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் தனுஜா முன் ஜாமீன் கோரி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம்முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யத வழக்கறிஞர் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவரது மகள் பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மூவேந்தன்