சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, அதிரடியாக அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாக கூறினார்.ஆனால் அவ்வபோது அதிமுக தொண்டர்களுடன் பேசியதை போன்ற ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவில் கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் சசிகலா.
அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி அதிமுக மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குள்ளநரி சசிகலாவை விரட்டுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.