இந்தியாவில் இரண்டாம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2 ஆம் அலையின்போது 387 கர்ப்பிணிகளில் 111 பேருக்கு தொற்று (28.7% பேர்) ஏற்பட்டதாகவும், ஆனால் முதல் அலையில் 1,143 கர்ப்பிணிகளில் 162 பேருக்கு (14.2% பேர்) மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களின் இறப்பு விகிதம் முதல் அலையின்போது 0.7% ஆகவும், 2வது அலையில் 5.7% ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்