அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

SHARE

சேலம் மேட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக தனது இரண்டு பவுன் செயினை அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதில் சௌமியா என்ற இளம்பெண்,கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் செயினையும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் “இரா. சௌமியா ஆகிய நான் BE. கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்.என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 .03.2020 அன்று இறந்து விட்டார்கள்.

தந்தை பணி ஓய்வுப் பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்து விட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச்செலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது.

எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்த பிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளோம் .

ஓய்வு தொகையாக கிடைக்கும் ரூ.7 ஆயிரம் பணத்தில் வாடகை ரூ.3 ஆயிரம் போக மீதமுள்ள ரூ.4 ஆயிரம் வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை வாங்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன்.எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்”, என்று தெரிவித்திருந்தார்.

இதனை சமூக வலைத்தளங்கள் பகிர்ந்த மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

Leave a Comment