பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை சாலை ஓரங்களில் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகளை ஒதுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முதலமைச்சர் பாதுகாப்பு பணிகள் உட்பட பல பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் நீண்ட நேரம் பெண் காவலர்களை நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்