கோயில்களை மூடி வைத்துவிட்டு மதுக்கடைகள் திறப்பதா? என ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,
அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன.
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக, போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,
’கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? உடனடியாக டாஸ்மாக் திறக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ என்று கூறினார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்