பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் திக் விஜய் சிங் கூறும்போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும்” என்தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங்கின் உரையாடலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, “பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
திக்விஜய்சிங் கருத்து மூலம், காங்கிரஸ் கட்சி சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்