சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

SHARE

1.அபய ஹஸ்தம் 

 காக்கும் முத்திரை 

பயம் என்பதன் எதிர்ச்சொல் அபயம். பயத்தை நீக்கி பாதுகாப்பு வழங்குகிறேன் என்பதை உணர்த்தும் முத்திரை ஆதலால் இதை காக்கும் முத்திரை என்பர்.

கை சுட்டுவிரல் முதல் சிறுவிரல் வரை நான்கு விரல்களையும் ஒன்றோடொன்று ஒட்டியமைத்து , பெருவிரலை சுட்டு விரலோடு சேர்த்து மேல்நோக்கி அமையும் முத்திரை. நாட்டிய வழக்கில் இது பதாகம் ( கொடி)  என்றழைக்கப்படும். சிற்ப படிமங்களில் மார்பு முலைக்கண் மட்டத்திற்கு கை நடுவிரலின் நுனி அமையும்.  அஞ்ச வேண்டாம். நான் இருக்கிறேன் என்னும் பொருள் தரும் முத்திரை. பெரும்பாலான கடவுள் படிமங்களில் இம்முத்திரையை  காணலாம்.

2.வரத ஹஸ்தம்.

அபய ஹஸ்தத்தை தலைகீழாகப் பிடித்தால் இம் முத்திரை. உள்ளங்கை வெளிப்புறமாக அமையும். படிமங்களில் இம்முத்திரை கனிவை வெளிப்படுத்தும்.

அனைத்து வளங்களையும் உனக்கு  வழங்குகிறேன் என்ற குறியீட்டை உணர்த்துகிறது.

பொதுவாய் சிற்பங்கள் பல கைகளுடன் இருக்கும். 

முன்னாடி இருக்கும் கரங்களை முன்னிரு கரங்கள் என்பார்கள்.  முதல் கை வலது கை என்றும்  இரண்டாவது கை இடக்கை என்றும் பொருள். 

வலது கரம் அபய முத்திரையுடன், இடது கரம் வரத முத்திரையுடன் அமையும். இதை, ’முன்னிரு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் இருக்கின்றன’ என்று குறிப்பிடுவார்கள்.

3.கடக ஹஸ்தம்.

கடகம் என்றால் நண்டு. கைத்தளத்திலிருந்து பெருவிரலை நீட்டி, உள் முகமாக சிறிது வளைத்து, நடுவிரலையும் அணிவிரலையும் ஒன்றோடொன்று இணைந்து முன்னோக்கி வளைத்து, சுட்டு விரலையும் சிறு விரலையும் தனது இடங்களில் நிறுத்தி மேற்கனுக்களை சிறிது வளைத்தால் பிறக்கும் கை முத்திரை கடக ஹஸ்தம் ஆகும். இதன் தோற்றம் நண்டின் உருவத்தை ஒத்திருக்கும். சிற்பவடிவங்களில் பாசம், அங்குசம் , தண்டம், கத்தி, அம்பு, போன்ற ஆயுதங்களை பிடிப்பதற்கு இம்முத்திரை பயன்படுகிறது. ஆயுதம் இல்லாமலும் இம்முத்திரை இருக்கும்.

( பல வித ஆயுதங்களை கடக ஹஸ்தம் கொண்டு ஏந்திய அகோர மூர்த்தி)

4 . சிம்ம கர்ண ஹஸ்தம்.

கடகமுத்திரையின் நடுவிரல் உள்ளங்கை வரையில் நன்கு வளைந்து அணிவிரல் அதனை தொடர்ந்து செல்ல, மற்ற விரல்கள் கடகமுத்திரையில் உள்ளவாறு இருக்கும். இதுவே சிம்ம கர்ணம் ( சிங்கச் செவி) ஆகும். 

அமைதியை இம்முத்திரை உணர்த்தும்.

இந்நான்கு முத்திரைகளை நன்கு கவனித்து உள்வாங்குவோம்.

மீதமுள்ள முத்திரைகள் பற்றிய விளக்கத்தை…. தொடர்வோம்..

– மா.மாரிராஜன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

”இறுதி வார்த்தை…” மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் – 05.

இரா.மன்னர் மன்னன்

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

Admin

Leave a Comment