ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் போலவே பாலிடெக்னிக் மாணவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தேர்வுகளை தேர்வுக்கட்டணம் செலுத்தி எழுதலாம் எனவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கலைக் கழகத்தில் 8 விருப்ப பாடங்கள் இருந்து வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் 9ஆவது விருப்பப் பாடமாக தமிழும் இடம்பெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.