பாகிஸ்தான் மரணதண்டனை கைதியாக உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவிற்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை அந்நாட்டு நாடாளுமன்றம் வழங்கி உள்ளது.
குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உளவு பார்க்க வந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
குல்பூஷன் ஜாதவ்விற்கு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2019ம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை அணுகி அவரது தண்டனையை நிறுத்தியது இந்தியா
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மசோதாவில் குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் குல்பூஷன் ஜாதவ் தனது தண்டனையை எதிர்த்து அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும். இதனால் குல்பூஷன் ஜாதவ் இந்தியா வர வாய்ப்பு இருப்பதாக இந்தியா நம்புகிறது.