கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக மத்திய அரசு ”கோவின்” செயலியை அறிமுகம் செய்தது.
இதில் முன்பதிவு செய்து கொள்வதன் மூலமே மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில் கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.
இதற்கு விளக்கமளித்துள்ள தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர், கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் கோவின் தரவு கணினிக்கு வெளியே உள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.