கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், மருத்துவர்கள், செவிலியர்களின் ஒரு நாள் உணவு செலவிற்காக ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்
பிரசித்தி பெற்ற உணவகங்கள் மூலமாக தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி வரவுள்ளது. அவ்வாறு தடுப்பூசி வந்த பின் பிரித்து மாவட்ட வாரியாக தடுப்பூசி போடப்படும் என்றார்.