மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு இணங்க டுவிட்டர் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில், சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய டிஜிட்டல் கொள்கையை விதித்து, அதற்கு இணங்கும்படி மத்திய அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்தாலும், பயனாளர்களின் தனிஉரிமை பறிக்கப்படுவதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.டுவிட்டருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, கடந்த வாரம் இறுதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், புதிய விதிகளுக்கு கீழ்ப்படிவதாக டுவிட்டர் தெரிவித்தது.
மேலும் கொரோனா சூழல் காரணமாக இறுதி முடிவினை எடுக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் டுவிட்டர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
– மூவேந்தன்