பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்களை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வீடுகளுக்கு சென்று வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டது டெல்லி அரசு. ஆனால் மத்திய அரசு 5 முறை இத்திட்டத்தை மறுத்து விட்டது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் உள்ள இந்த சமயத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறும் என தெரிவித்தார் முதல்வர்.
மேலும் பீட்சா, ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது என மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.