கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் மருத்துவருக்கு அவரை காப்பாற்ற கிராம மக்கள் 20 லட்ச ரூபாய் திரட்டிய நெகிழிச்சி சம்பவம் அரேங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கரஞ்சேடு என்ற பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அவர் கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு பணமே வாங்காமல் மருத்துவ சேவை செய்துள்ளார்.ஆகவே தங்கள் கிராம மருத்துவரை காப்பாற்ற அப் பகுதி மக்கள் கிராம மக்கள் நிதி திரட்டியுள்ளனர்.
இதுவரை ரூபாய் 20 லட்சம் நிதி திரட்டி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவரின் சிகிச்சைக்கு அரசின் மூலம் நிதி ஒதுக்குவதாக அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு கரஞ்சேடு கிராம மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. தங்களின் கிராம மருத்துவரை காப்பாற்ற கிராம மக்கள் எடுத்த நடவடிக்கையினை இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
இந்த கொரோனா பெரும் தொற்று காலத்திலும் மனிதம் அழியவில்லை என என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.