இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்கும்படி டுவிட்டருக்கு கடைசி வாய்ப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது.
டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வௌியிட கூடாது என்றும், இந்த கொள்கைக்கு ஒத்துப்போக வலைதளங்களுக்கு 3 மாதம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த காலக்கெடு மே 25ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைக்கு இணக்கம் தெரிவித்தன.
ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக டுவிட்டர் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், டிஜிட்டல் விதிகளை கடைபிடிக்கும்படி டிவிட்டருக்கு இறுதி வாய்ப்பு அளித்து மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்