வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்குல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் பற்றிய பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை பயனாளர்களின் மீது திணிப்பதற்காக தந்திரமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இதை தடுக்க நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ – என கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு, ’தற்போது தனிநபர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால்அதற்கு முன்பாக தனது கொள்கைகளை மக்களை ஏற்க வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சிக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய விதிகள் மத்திய அரசின் பாதுகாப்பிற்கு எதிராக உள்ளன- என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
- மூவேந்தன்