ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் உணரப்பட்டு வருவதால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து 7வது முறையாக அந்த ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ஆர்பிஐ செய்யவில்லை. கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பின், இந்த ரெப்போ 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 3 புள்ளி 35 சதவீதமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பணப்புழக்கத்தை சீராக வைக்கும் நோக்கிலேயே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்குவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மூவேந்தன்