வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

SHARE

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால்  வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு  தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

கொனா பரவலை தடுக்க முககவசமும் தடுப்பூசி ஆகியவைதான் ஆயுதங்கள் என் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

வெளிநாடுகளை சேர்ந்த பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களின் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இந்நிலையில், தங்களின் தடுப்பூசியால் மக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அயல்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வைத்துள்ளன.

இதுவரை மத்திய அரசு எந்த தடுப்பூசி நிறுவனத்துக்கும் இத்தகைய சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த சலுகையை இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.  இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தடுப்பூசியினால் ஏற்படும் விளைவுகளுக்கு இழப்பீடு தருவதில் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல அனைத்து தடுப்பூசி நிறுவனங்களுக்கும் அந்த பாதுகாப்பை  வழங்க வேண்டும். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம் – எனக் கூறப்பட்டு உள்ளது.

சீரம் நிறுவனம் தற்போதுகோவிஷீல்டு தடுப்பூசியை  தயாரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின்  நோவாவாக்ஸ் தடுப்பூசியையும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் தயாரிப்பதற்கும் அந்நிறுவனம் அனுமதி  கேட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

Leave a Comment