தமிழ்த்தேச அரசியல் போராட்டம் – நூல் மதிப்புரை

SHARE

அசோகர் காலம் தொடங்கி அக்பர் காலம் தொட்டு தற்போது மோடி காலம் வரை இந்தியா ஒருக்காலும் ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் கொண்ட ஒற்றை தேசமாக இருந்ததில்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. இந்திய அரசமைப்பு சட்டம் இந்தியாவை ஒற்றை தேசமாகவோ இந்தியன் என்கிற தேசிய இனத்தையோ வரையறுக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை.

ஆனால் படையெடுத்து வந்த ஆரிய பிராமணர்கள் தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும் மேற்குலக வல்லரசுகளின் வணிக வேட்டைக்கான ஒற்றை சந்தையாக நீடிக்கவும் செய்யும் முயற்சிகளால் ஒற்றை அதிகாரமையக் குவிப்போடு, பாசிசத்தன்மை கொண்ட ஒற்றை தேசமாக இந்தியா உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்தித்திணிப்பில் தொடங்கி நீட் தேர்வு முதல் காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம், புதிய கல்விக்கொள்கை, குடியுரிமை திருத்தச்சட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளும் புதிய இந்தியாவான ‘பாசிச இந்தியா’ பிறப்பதற்கான செயல்பாடுகளே. 

இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் இந்திய துணைக்கண்டத்தில் ஓர் பெரும் உள்நாட்டு போர் உருவாக வழி வகுக்கும். உண்மையில் அது உள்நாட்டு போராக அன்றி தேசிய இனங்களின் சுதந்திர அரசு அமைக்கும் விடுதலைப்போராகவே உருவெடுக்கும். காஷ்மீரிகள், சீக்கியர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்கள் என ஏகாதிபத்திய இந்திய அரசை எதிர்த்து விடுதலை போர் புரிந்து கொண்டிருக்கும் தேசிய இன மக்களின் போராட்ட வரலாறு நீண்ட நெடியது.

தமிழர்களுக்கென்றும் அத்தகைய விடுதலைப்போர் வரலாறு இருக்கிறது. காஷ்மீரிகளின் சேக் அப்துல்லா, சீக்கியர்களின் பிந்தரன்வாலே போல நமக்கும் பல தேசியத்தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆளும் கங்காணி திராவிட அரசுகளால் அத்தகையவர்களின் வரலாறும் தியாகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் மறைக்கப்பட்ட தமிழ்த்தேசிய போராளிகளின் வரலாற்றை மீட்டெடுத்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும்  பெரும்பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் நூலாசிரியர் பொழிலன். 

இந்நூல் தமிழ்த்தேசிய அரசியலின் மூலவர்களான தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், தோழர் இலெனின், தோழர் மாறன் போன்றவர்கள் குறித்தும் தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சி(மா.லெ)யின் அரசியல் செயல்பாடுகளையும் கட்சி அறிக்கைகளையும் தமிழ்நாடு விடுதலைப் படை தோழர்களின் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளையும் தொகுத்து வழங்குகிறது. இந்நூலை தொகுத்து வழங்கிய தோழர் பொழிலன் அவர்கள் ‘தமிழ்த்தேசிய தந்தை’ என போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முன்னோர்கள் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் புரிந்தார்கள். அப்போர் இன்னும் முற்றுப்பெறாமல் 1947க்கு பின் வேறொரு பரிணாமத்தை அடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். தற்போதைய சூழலில் உலகெங்கும் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் சிஷ்ய பிள்ளையாக விளங்கும் டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ஒரு இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய ஓர் வரலாற்று காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 

எனவே தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கும் இந்திய ஏகாதிபத்திய அரசாங்கம் வீழ்ந்து விடுதலைப்பெற்ற தேசிய இனங்களின் கூட்டரசாக இந்திய ஒன்றியம் திகழ வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் சமூக பொருளாதார காரணிகளை தீர்மானித்துக் கொள்கின்ற, சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர தமிழ்த்தேச குடியரசை நிறுவும் இலட்சியப்பாதையில் பயணிக்கும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் கையில் ஏந்த வேண்டிய பெரும் ஆயுதமாக இந்நூல் விளங்குகிறது. ஒவ்வொரு தமிழரும் தலைமுறைகள் தோறும் தங்கள் சந்ததியினருக்கு கடத்த வேண்டிய ஓர் வரலாற்று ஆவணம் இந்நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பக்கங்கள்: 480

விலை: ரூ.300

பதிப்பகம்: மன்பதைப் பதிப்பகம்.

– சந்திரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் மதிப்புரை

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

Leave a Comment