கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் களப்பணியில் உள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும்போதுகூட, மாநிலங்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தடுப்பூசி வீணடிக்கப்படுவது ஒரு பிரச்சனையாக உள்ளது என கூறிய அவர் ஒரு டோஸ் வீணாக்கினாலும், அது ஒரு உயிரை பாதுகாக்கும் கேடயத்தை கொடுக்க முடியாமல் போவதாகும். எனவே, தடுப்பூசி வீணாவதை நிறுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
அதே நேரம், உள்நாட்டில் உற்பத்தியான தடுப்பூசிகளை பிரதமர் வெளிநாடுகளுக்கு விற்ரது தொடர்பான கேள்விகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த நிலையில், இதுவரை அதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
- கெளசல்யா அருண்