தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200 – லிருந்து ரூ. 900- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 800-லிருந்து ரூ. 550 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
குழுவாக சென்று பரிசோதனை மேற்கொண்டால் ரூ.400 மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்