ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

SHARE

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் இச்சூழலில் அதை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் தாக்குதலுக்கு யாரெல்லாம் எளிதில் இலக்காகிறார்கள் என்பது குறித்து இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு அமைப்பான சிஎஸ்ஐஆர் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 

அந்த ஆய்வின் முடிவுகளில்  ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் ஓ இரத்தப்  பிரிவை சேர்ந்தவர்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் கூட தீவிரமாக வெளிப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்தோடு நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சீனா, இத்தாலி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் இரத்த வகைக்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தங்கள் ஆய்வுகளில் கூறி இருந்தன என்பதால் சிஎஸ்ஐஆரின் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆனால் சில குறிப்பிட்ட மாதிரிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்பதால், இதன் முடிவுகளை அப்படியே ஏற்க இயலாது என்றும் பல மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

பீட்சா டோர் டெலிவரி செய்யும் போது ரேசன் பொருட்கள் செய்ய முடியாதா? .. கேள்வி எழுப்பும் டெல்லி முதல்வர்

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

Leave a Comment