கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!.
கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொண்டு இரண்டாம் தவணைக்குக் காத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கும் மேல் உள்ள இணைநோயும் உள்ளவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் கடந்த மார்ச் 1 அன்று தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – என்று இந்த திட்டம் மாற்றப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டுவகை தடுப்பூசிகளும் போடபட்டன. இப்படியாக முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த காலம் 4 முதல் 6 வாரங்கள் ஆகும்.
தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கோவாக்சின் போட்டுக் கொண்ட பலருக்கு இரண்டாவது தவணை ஊசி போடுவது தள்ளிப் போனது, ஆனால் கோவிஷீல்டு இரண்டாம் தவணையும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவாக்சின் இரண்டாம் தவணை போட வேண்டிய மக்கள் எப்படி அதற்காக முன்பதிவு செய்வது என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி மாநகராட்சி அளித்துள்ள ஒரு இணைய இணைப்பில் மக்கள் பதிவு செய்து கொண்டால் எங்கு, எப்போது அவர்களுக்கு கோவாக்சின் போடப்படும் என்ற தகவலை அவர்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
கோவாக்சின் இரண்டாம் தவணைக்காக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்: //t.co/mS2DNwPVA8
அல்லது இந்த இணைய முகவரியையும் பயன்படுத்தலாம்: http://covid19.chennaicorporation.gov.in/covid/Registration/index.jsp
– நமது நிருபர்