அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது.
பாங்காக், தாய்லாந்து.
உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக் கவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம்) வரை அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல், தலைநகர் பாங்காக்கில் ஒரு அரசு விழாவில் பங்கேற்க, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பொதுமக்கள் ”எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?” என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாங்காங் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் பிரதமருக்கு 6,000 பாட் (இந்திய மதிப்பில் 14,000 ரூபாய்) அபராதம் விதித்துள்ளார்.
- பிரியா வேலு