ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

SHARE

ஐபிஎல் லீக் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதினர். இதில் அபாரமான ஆட்டம் தந்து ஹாட்ரிக் வெற்றி அடைந்தது  ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 

சேப்பாக்கம், சென்னை

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் கோலி களம் இறங்கினார்கள்.  ஆனால் ஆட்டத்தின் 2 வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார் கோலி. அதற்கு பிறகு வந்த ரஜத்தின் விக்கெட்டும் அதே ஓவரில் போனது.  கோலியின் விக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தாலும் அதற்கு பிறகு தான் ஆட்டமே களைகட்டியது. 

அடுத்து ஆட வந்த மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை தந்தார். மேக்ஸ்வெல் மற்றும் படிக்கல் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். மேக்ஸ்வெல் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என்று தெறிக்கவிட்டார். இவர்களின் பார்ட்னர்ஷிப் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் உடைந்து, படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்  78 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ்ஸின் ஆட்டத்தில் சேப்பாக்கமே தெறித்தது. ஆட்டத்தின் இறுதி மூன்று ஓவர்களில் மட்டும் பந்துகளை பறக்க விட்டு  56 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் மட்டும் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை 204 க்கு கொண்டு வந்து ஆட்டத்தை முடித்தார். 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது என்றே சொல்ல வேண்டும். கில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அவுட்டானார். நான்கு ஓவருக்கு ஒரு விக்கெட் என ஆட்டம் சென்றது. அடுத்தடுத்த வீரர்கள் அடித்து ஆடினாலும் நின்று ஆட முடியவில்லை. இறுதியில் ரஸல் கொஞ்சம் நின்று ஆடினார். ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறிய ரஸல், பிறகு ஹர்ஷல் பட்டேல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 19.1 ஓவரில் 162 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது கொல்கத்தா அணி. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

Leave a Comment