மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

SHARE

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ். 

சேப்பாக்கம், சென்னை

டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  மும்பை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக அடித்து ஆடியது. அதனால் பவர் பிளே ஓவர்களிலேயே அந்த அணியால் 53 ரன்களை எடுக்க முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியும் சற்று போராடி விக்கெட்டுகளை எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியின் விஜய் சங்கர் ரோஷித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவம் வாய்ந்த விக்கெட்டுகளை எடுத்தார்.  ஓரளவுக்கு நல்ல ஃபீல்டிங் செய்து மும்பை அணியின் ரன்ரேட்டை குறைத்தது சன்ரைசர்ஸ் அணி. இறுதியில் பொலார்ட்  35 ரன்கள் எடுக்க மும்பை இண்டியன்ஸ் அணியின் ஸ்கோர் 150 ஆனது. 

அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக ஆடியது. அதுவும் பேர்ஸ்டோ-வின் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் கண்டுவிட்டது.  போல்ட்டின் ஓவரில் 18 ரன்களும், மில்னேவின் ஓவரில் 19 ரன்களும், க்ருணாலின் ஓவரில்  13 ரன்களும் எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார் பேர்ஸ்டோ.  அவர் திடீரென அடுத்த ஓவரிலேயே அவுட்டும் ஆனார். சற்று தாக்குபிடித்து ஆடிய வார்னரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினார். சன்ரைசர்ஸ் அணியினர் விருப்பமே இல்லாமல் ஆடுவது போல் இருந்தது. அடுத்தடுத்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்கள் மற்றும் டக் அவுட்டில் சென்றனர். இறுதியில் 137 ரன்களுக்கே சன்ரைசர்ஸ் அணிகள் ஆல் அவுட்டாகினர். சன்ரைசர்ஸ் அணி போராடாமல் தழுவிய தோல்வி என்றே இது கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகின்றது. இது இந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசார்ஸ் அணியின் ஹாட்ரிக் தோல்வி என்பது குறிப்பிடத் தக்கது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

Leave a Comment