யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

SHARE

சந்தேகமேயில்லாமல் உலகின் தலைசிறந்த வரலாற்று நூல்களில் ஒன்று சேப்பியன்ஸ். வரலாறு குறித்த புதிய செய்திகளைத் தருவது மட்டுமே வரலாற்று நூல்களின் பணி அல்ல. மாறாக, வரலாறு மீதான புதிய கோணத்தை வாசகர்களுக்குக் காண்பிக்கும் பணியும் வரலாற்று நூல்களுக்கு உள்ளது.

அப்படிப்பட்ட வெகுசில ஆழமான வரலாற்று நூல்களில் ஒன்றுதான் சேப்பியன்ஸ்.

மனிதனின் உயிரியல் பெயர் ’ஹோமோ சேப்பியன்ஸ்’. ஒருகாலத்தில் வால் இல்லாத குரங்காக இருந்த மனிதன் எப்படி இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் உயிரினமாக மாறி இருக்கிறான் என்பதை மிக நேர்த்தியாக விளக்குகின்றது இந்த சேப்பியன்ஸ் நூல்.

சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவுப் புரட்சி, சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வேளாண் புரட்சி, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவியல் புரட்சி – என்ற மூன்று மிக முக்கிய தருணங்களை மனித இனம் எப்படிக் கடந்து வந்தது என்ற பயணம் பல அதிர்ச்சிக்கு உரிய தகவல்களோடு இந்த நூலில் கொடுக்கப்பட்டு உள்ளது.

சிறிய சிறிய கேள்விகள் மூலம் பெரிய பெரிய ஆய்வுகளை நோக்கி வாசகர்களைத் தள்ளும் யுவால் நோவா ஹராரியின் உழைப்பும், அவரது வார்த்தைகளில் கலந்துள்ள கேலியும் புத்தகத்தின் மிகப் பெரிய வலிமைகள்.

மனிதன் அடிப்படையில் நல்லவன், விவசாயம் என்பது புனிதமானது, மதங்கள் மதிப்புக்கு உரியன – என்ற ஆதாரமற்ற நம்பிக்கைகள் மீது இந்த நூல் நடத்தும் தாக்குதல்களைக் கடந்து போவது கடினமான ஒன்றாக இருக்கும்.

அதிலும் ஆதி மனிதனின் காலத்திலேயே நடந்த படுகொலைகள் குறித்த செய்திகள் எல்லாம் தூக்கத்தைக் கெடுப்பவை. ஆனாலும் கடந்த காலத்தை நம்மால் மாற்ற இயலாது என்ற நிலையில், அது சொல்லும் பாடங்களை நாம் கவனித்தே ஆக வேண்டும் என்பதால் இந்த புத்தகம்வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகின்றது.

பொதுவாக வரலாற்று நூல்களில் ஆதி மனிதனை ‘அவன்’ என்று ஆண்பாலில் அழைக்கும் பாணியே உள்ளது. இதன் பின்னாக உள்ள ஆணாதிக்கப் போக்கு கட்டாயம் அபாயகரமானதுதான். தனது நூலில் ஆதி மனிதனை ‘அவள்’ என்று அழைக்கிறார் யுவால். இப்படி நிறைய உள்ளது நூலில் கோடிட்டுக் காட்ட.

2011ல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சேப்பியன்ஸ் இப்போது தமிழிலும் கிடைக்கின்றது.

தமிழில் மொழி பெயர்த்த நாகலட்சுமி சண்முகம் மிகச் சிறப்பாக மொழி பெயர்ப்பை செய்திருக்கின்றார். அவரது முன்னுரையையும் சேர்த்தே வாசிப்பது பலன் தரும்.

இந்த நூலை மைரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாகப் பரிந்துரைத்தார். அதற்கு இந்த நூல் கட்டாயம் தகுதியானதுதான்.

– இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

தமிழ்த்தேச அரசியல் போராட்டம் – நூல் மதிப்புரை

கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

Leave a Comment