யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

SHARE

யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் நேன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொது மக்கள் நூலகத்தை உருவாக்க காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின்போது யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பொது நூலகம்1981ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி வன்முறைக் குழு ஒன்றினால் தீயிட்டு எரிக்கப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

கொரோனாவை வென்ற இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் 44 பேர் மரணம்!

ஏன் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கலை தெரியுமா? அமெரிக்கா விளக்கம்!

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

Leave a Comment