பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

SHARE

‘புளி மாங்கா புளிப்…’ பாடலுடன் ஆரம்பமானது பிக் பாஸின் 8ஆம் நாள். காலையிலேயே மத்தவங்கள இமிடேட் பண்றன்னு மைக்கை கழட்டி வெச்சதால பிக் பாஸ்கிட்ட பல்பு வாங்கினார் அபிஷேக், அதை கலாய்த்த பிரியங்காவும் பிக் பாஸ்கிட்ட அசிங்கப்பட பதிலுக்கு அபிஷேக் கலாய்க்க கலகலப்பான ஆரம்பமாக இருந்தது. 

இசைவாணி மற்றும் பாவ்னி குரூப்பிஸம் ஃபார்ம் ஆகியிருக்குறதாவும், தான் தனியா இருக்குறதாவும் அவங்க அவங்க அனுபவம் பற்றி  பேசிக்கிட்டு இருக்க, ஐக்கி என்னன்னு கேட்டு அவங்களும் பேச்சுல சேர்ந்தாங்க. அவங்க தரப்பு பேச்சிலும் குரூப்பிஸம் இருக்குறது வெளிப்பட, அதை சுட்டிக்காட்டினார் இசைவாணி. 

பாத்ரூமில் இமான் அண்ணாச்சியும், தாமரையும் பேசும்போது, ‘நேத்தைக்கு அப்புறம் இப்போ கொஞ்சம் தெளிவாயிருக்கேன்..’ அப்படின்னு தாமரை சொல்ல, ’இதுல தெளிவா இருக்க என்ன இருக்கு… நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு’ன்னு அண்ணாச்சி சொல்ல, ’இல்ல நான் வெள்ளந்தியா பேசுற சில விஷயங்கள் சிலருக்கு தப்பா இருக்கு, நான் சிரிச்சாக்கூட தப்பா இருக்கு, நான் கொஞ்சம் மத்தவங்ககிட்ட பழகுறத மாத்திக்கணும்’ன்னு தாமரை சொல்ல…

அண்ணாச்சியோட மைண்ட் வாய்ஸ், ’என்ன இவ்ளோ தெளிவா பேசுது, இப்படி இருந்தா இது இந்த வீட்டை விட்டு கிளம்பாதே…’ன்னு யோசிச்சிக்கிட்டு, ’அப்படில்லாம் ஒன்னும் இல்ல, நீ எப்பவும் உன்ன மாத்திக்காத, எப்படி வந்தியோ அப்படியே இரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு…

அடுத்ததா வந்தது பிக் பாஸ் வீட்டுக்கான முதல் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க். 

ஹவுஸ்மேட்ஸ் இடுப்புல பலூன கட்டிக்கணும், பெல் அடிக்கும் போது அங்க இருக்குற ஒரு ஊசிய எடுத்து ஒருத்தரோட பலூன மட்டும் அடிச்சிட்டு ஊசிய வெச்சிடனும். பலூன் இல்லாதவங்க அதுக்கு அப்புறம் ஆட்டத்துல இல்லை அப்டின்னு அர்த்தம். ஹவுஸ்மேட்ஸ்லாம் ரொம்ப சீரியஸாவே விளையாடினாங்க. ஆனா போட்டினா சண்டையில்லாமலா…

பிரியங்கா, இமான், இசை, பாவ்னி, ராஜூ,  முதல் சுற்றிலேயே பலூன்களை பறிகொடுத்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினர். 

அடுத்த சுற்றில் அபினய், வருண், சிபி, அக்ஷரா, அபிஷேக் பலூன்களை இழந்தனர். 

இந்த அனைவரின் பலூன்களையும் உடைத்தது நீரூப், நல்லாவே விளையாடுனாரு. விளையாட்ட விளையாட்டா விளையாடினாரு. அவர் உயரத்துக்கும் எடைக்கும், யாராலயும் ஈடு கொடுக்க முடியல. 

அடுத்த சுற்றில் அபினய் ஊசி எடுக்க, ’நீ எப்படிடா எடுக்க முடியும், நீ கேம்ல இல்லடா’ன்னு  சொல்ல அது ரூல்ஸ்ல இல்லைன்னு அபினய் குழந்தைத் தனமாக அடம்பிடிக்க, வருணும் அபினய்க்கு வக்காலத்துக்கு வாங்க, ஐக்கி பங்கமாக அசிங்கப்படித்தினார். பலூனை இழந்தவர்கள், அதற்கு பிறகு ஆட்டத்தில் இல்லை என்று ரூல்ஸ் புக் எடுத்து சத்தமாக படித்தார் ஐக்கி. பிறகு ஊசியை வைத்து விட்டு சென்றார் அபினய். 

கடைசியாக இருந்தது நிரூப், சின்னபொண்ணு, தாமரைச்செல்விதான். நீருப்பிற்கு அடுத்து நன்றாக விளையாடியது தாமரை. எதிர்பாராத விதமாக நீரூப்பின் பலூனை லாவகமாக உடைத்தார் தாமரை.. கடைசியாக இருந்தது தாமரை மற்றும் சின்னபொண்ணுதான். 

வழக்கம்போல்  பிரியங்கா தன் ஆங்கரிங் வேலையை இங்கேயும் செய்தார். மக்களே கிராமிய பாடலா, நாடத்துறையான்னு பலத்த போட்டி நடக்குது, யார்லாம் சின்னபொண்ணுக்கு சப்போர்ட் பண்றீங்க, யார்லா தாமரைக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு ஆரம்பிச்சிட்டாங்க. இந்த கொசு தொல்லை தாங்க முடியல…

தாமரை மற்றும் சின்னபொண்னு மாறி மாறி விளையாட, ஒரு கட்டத்தில் சின்னபொண்ணு தன் பலூனை தானே உடைத்துக் கொண்டார். இறுதியில் தன் பலூனை காப்பாற்றி நின்ற தாமரை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் தாமரைக்கு வாழ்த்துகளை கூறி இந்த வாரம் நாமினேஷனில் உங்களை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். அதற்கு சின்ன பொண்ணு, இந்த வாரம் மட்டும் தானே அப்படின்னு லைட்டா கடுப்பானார். 

பெட்ரூமில் பிரியங்காவிடமும் சின்னபொண்ணு பிரச்சனை வரவேண்டாம் என்று நானே உடைத்துக் கொண்டேன் என்றும் கூறினார். ஆனா தாமரை தலைவர் ஆனது சின்னபொண்ணுக்கு மட்டுமில்ல மத்தவங்களுக்கும் லைட்டா காண்டுன்னு டைனிங் டேபிளில் தெரிந்தது. 

’தலைவர் பதவினா சும்மா இல்ல, எல்லாரும் நிறைய குறை சொல்லுவாங்க, நீங்கதான் செய்யணும், ஒரு வாரம் மட்டும்தான் சந்தோஷமா இரு’ன்னு தாமரையை பயமுறுத்தினர் அபினய், வருண், நிரூப், அக்ஷரா, சிபி போன்றோர். 

ஆனா தாமரை கேட்டுக்கொண்டாரே தவிர சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து தாமரை சின்னபொண்ணுவிடம் பேச வந்தார், என்னாச்சுன்னு கேக்க, பெருசா ஒண்ணுமில்ல நான் உனக்கு விட்டு கொடுத்திருக்கேன் அப்டின்னு சின்னபொண்னு சொல்ல, நீங்க ஏன் அப்படி செய்யணும்னு தாமரை கேக்க,  ’வேண்டான்னுதான்’ அப்டின்னு சின்னபொண்ணு சொல்ல, அதற்கு தாமரை பரவாயில்லைக்கா நான் செஞ்சது ஏதாவது தப்பு இருந்தா மன்னிச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.  

தாமரையின் தலைவர் பதவி சிலபேருக்கு நெருடலாவே இருந்தது. தாமரை விளையாட்டை விளையாட்டா பாத்து தான் விளையாடினாங்க. இதுல நெருடலா இருக்குறதுக்கு ஒன்னுமே இல்ல. ஆனா சில பேர் தாமரையை வெத்துன்னு நினைச்சு இருப்பாங்கன்னு தோன்றியது, நீயெல்லாம் தலைவரா அப்டிங்குற மாதிரி சிலரின் பார்வை அப்பட்டமாகத் தெரிந்தது .

அடுத்து இந்த வாரத்தின் தலைவர் ஆன தாமரை அடுத்து பாத்ரூம் டீம், கிச்சன் டீம், க்ளீனிங் டீம், வெசல் டீம் பிரித்து அவரவருக்கு பொறுப்புகளை கொடுத்தார். 

அடுத்து நாமினேஷன் சுற்றும் வந்தது, அவரவர் சில சப்பைக்கட்டுகளை கட்டி சிலரை நாமினேட் செய்தனர். ரொம்ப பெரிய காரணம் என்று யாருக்கும் இல்லை  என்பது தெளிவாகியது, இறுதியில் தாமரை மற்றும் பாவ்னியை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர். 

அப்பாடா…… சண்டை ஆரம்பம் ஆயிடுச்சு…….இனிமே தான் பிக் பாஸ் நல்லாவே இருக்கும்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

நல்லாசிரியர் விருது இவர்களுக்கு மட்டும் தான்… தமிழக அரசு அதிரடி

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்..!!!

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

Leave a Comment