பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

SHARE

என்னடா பிக் பாஸ்ல இன்னும் யாரும் சண்டை போடலையேன்னு பிக் பாஸ்க்கே தோனிடும் போல… அந்தளவுக்கு பிக் பாஸ் கொஞ்சம் போரா போகுது. ஒரு சண்டையும் வரமாட்டேங்குது, சுவாரஸ்யமும் இல்லாம போகுது. 

நான்காம் நாள்  இரவு நடந்த சம்பவத்துடன்தான் பிக் பாஸ் தொடங்கியது. தாமரை செல்விக்கு ராம்ப் வாக் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் ஐக்கி. அது எப்படி இருக்க வேண்டும் என்று நமீதா நடந்தும் காட்டினார் அதற்கு தாமரையின் வார்த்தையும், பார்வையும் நமீதாவிற்கு கோபம் வரவழைத்தது. 

அத்தோடவே தாமரை செல்வி நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, தாமரையின் வெள்ளந்தி சிரிப்பால் நமீதாவுக்கு கோபம் இன்னும் அதிகமானது. இதை பிரியங்கா எச்சரித்தும், தாமரை நிறுத்தவில்லை. அப்புறம் படுக்கையில் ’நமீதா என்கிட்ட வெச்சுக்காதீங்க அசிங்கமா பேசிடுவேன்’ – அப்டின்னு கடுமையாகவே பேசிவிட்டார் தாமரையிடம். தாமரைக்கு சற்றென்று முகமே மாறியது.  அப்புறம்தான் சூழ்நிலை புரிந்து, நமீதாவிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் நமீதா அதிக கோபத்தில் இருந்ததால் மன்னிக்கவில்லை. எனக்கு இன்னும் கோபம் போகல அதனால மன்னிகல… காலைல, எனக்கு கோபம் குறைஞ்சதும் மன்னிச்சுடுவேன் விட்ருங்கன்னு – சொல்லிட்டங்க நமீதா.

ஆனா உண்மையாவே நமீதாவுக்கு தாமரைமேல இருக்குற கோபம் இரண்டு விஷயத்துக்காக ஒண்ணு, ராம்ப் வாக்ல நமீதா நடக்குறப்ப, ’நீ மயக்குற மாதிரி நடக்குற, அப்டி நடக்குறதுக்கு எனக்கும் சொல்லிக் குடு’ன்னு சொன்னது. இரண்டாவது, கத சொல்லட்டுமா டாஸ்க்ல நமீதா ’என்ன மாதிரி இருக்குற நிறைய குழந்தைகள 40… 50ன்னு நான் வளக்கணும்’னு சொன்னத, தாமரை ’நீ நாப்பது இல்ல நானூறு குழந்தைகள கூட வளப்ப’ன்னு சொன்ன விதம். 

ஆனா தாமரைய இந்த சம்பவத்தில பாக்கும் போது வேணும்ன்னே சொன்ன மாதிரி தான் தெரியுது. இந்த ஊர் குசும்புன்னு ஒண்ணு இருக்குல அது கொஞ்சம் தெரியுது. 

அடுத்த நாள் வந்தது, பிக் பாஸ்ல எப்பவும் புது பாட்டுதான் போடுவாங்க, 5 ஆம் நாளுக்கு  ’எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேக்கும்’னு  பழைய பாட்ட போட்டு எழுப்பினாரு பிக் பாஸ். தாமரை ’நான் சாதாரணமாத்தான் பேசின’ன்னு இமான் அண்ணாச்சிக்கிட்ட சொல்ல, ’நான் சமாதானம் படுத்தட்டுமா’ என்னெ கேட்டு அந்தப் பக்கம் வந்த நமீதாவை அழைத்தார் அண்ணாச்சி. அதற்கு நமீதா ’இப்ப பேச வேண்டான்’னு போயிட்டாங்க, அண்ணாச்சிக்கு செம பல்பு. 

‘ஒரு கத சொல்லட்டுமா’ டாஸ்க்குக்கு அடுத்து வந்தவர் ஐக்கி. எல்லாம் இருந்தும் தனியா இருப்பது கஷ்டம்தான். சாப்பிட்டியா, நல்லா இருக்கியா, என்ன பண்ற அப்டின்னு விசாரிக்கக் கூட ஆளில்லாமல் இருப்பதன் கஷ்டத்தை கூறினார் ஐக்கி. ’என் அம்மாவே என்ன விட்டுடுட்டாங்க, நான் தனியா தான் வாழுற, எட்டு வருஷம் ஆச்சு என் அம்மாகிட்ட பேசி, கோவிட்ல கூட நான் தனியா தான் இருந்த, யாரும் என்ன விசாரிச்சதே இல்ல’ என்றும் கூறினார்.

’நான் ஒரு தமிழ் ராப்பர். என் லுக் பாத்து கூப்பிட்றவங்க, நான் தமிழ் பேசிறத பாத்துட்டு அப்புறம் வேண்டான்னு சொல்லிடறாங்க. உலகத்துலயே மூத்தகுடி தமிழ்தான். தமிழ் மொழியப் பத்தி நான் எழுதின ஆங்கிலப் பாடல்தான் எனக்கு ஹிட் குடுத்துச்சு. நான் என்ன மாதிரியே இருக்குற 15 பெண்களுக்கு ஆதரவு கொடுக்குறேன். பறக்க நினைக்குற எங்களுக்கு சிறகுகள் தரலைன்னாலும் பரவாலல, சிறகுகளல உடைக்காதீங்கன்னு’ கேட்டுக்கிட்டாங்க. இறுதியா ‘எண்ணிய முடிதல் வேண்டும்” என்ற பாரதியார் பாடலுடன் முடித்தார் ஐக்கி.    

அப்புறம் சுருதியிடம் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார் ஐக்கி, ’ஃபெமினிஸ்ட்னா இறுக்கமா இருக்கனும்னு அவசியமில்லை. நான் விக்டிம் இல்ல நான் சர்வைவர்’ன்னு கட்டி அணைத்துக் கொண்டார்கள்.  

கத சொல்லட்டுமா டாஸ்க்கு அடுத்து வந்தவர், பாவ்னி. இழப்புகளும் அதன் பின்விளைவுகளும் சாமானியனை பாதிப்பதற்கும், பிரபலங்களை பாதிப்பதற்கும் வேறுபாடு உண்டு. தற்செயல் தொடர்பால் ஏற்பட்ட காதல், அப்புறம் பெற்றோர் விருப்பம் இன்றி நடந்த திருமணம், எதிர்பாராமல் நடந்த மிஸ்கேரேஜ், கணவரின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட சண்டை, அதனால் நடந்த அவரின் தற்கொலை என்று நடந்த அனைத்து சம்பவங்களையும் இன்று நடந்தது போல் நிதானமாக கூறினார். இவங்க சொல்றத நம்மவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. ஆனா இந்த கேஸ்ல இவங்க மேலதான் நிறைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. 

அப்புறம் நான் தனியாவே இருந்தேன், தனியா இருக்க எனக்குப் பிடிக்காது, அப்டியே கொஞ்ச காலம் போச்சு, அப்புறம் ஒரு ரிலேஷன்ஷிப் வந்துச்சு, அதுவும்  பாதிலயே முடிஞ்சிடுச்சு, அப்புறம் தான் விஜய் விடில சீரியல்க்கு கேட்டாங்க, அது எனக்கு நல்ல ரீச் கொடுத்தது. எனக்கு வாழ்க்கையில தனியா இருக்க பயம், ஆனா நான் தனியாதான் இருக்கனுன்னு ஆண்டவன் எழுதிருக்கார் போல’ன்னு முடிச்சாங்க பாவ்னி. பாக்கவே கொஞ்சம் பாவமா தான் இருந்தது. 

அப்புறம் அதிகாலை 4 மணிக்கு தாமரை வெளில இருக்குற சோபாலயே தூக்கிட்டாங்க. அங்க நமீதா இருந்தாங்க, தூக்கம் வரம இருந்தாங்க. அப்புறம் அவங்களே தாமரைய எழுப்பி ’உள்ளப்போய் படுங்க, நான் உங்கள் மன்னிச்சிட்டேன், நாம இப்ப பேசினத யார்கிட்டயும் சொல்லாதீங்க’ன்னு சொன்னாங்க. டீ போடும் போது ’நான் இப்டி தான் முதல்ல கோபம் காட்டுவ அப்புறம் அன்பா இருப்ப, என்ன உங்க தங்கச்சியா பாருங்க நான் உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டே’ன்னு சொன்னாங்க நமீதா.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

Leave a Comment