ஐபிஎல்லில் நேற்று இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடந்தன. மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும் மோதின.
இதில் மும்பை அணி வென்றால் ஃபிளே ஆஃப்பிற்கு செல்ல வாய்ப்பு இருந்தது. அதுவும் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும், அதாவது மும்பை அணி அதிக ரன்கள் எடுத்து எதிரணியை சொற்ப ரன்களில் வீழ்த்த வேண்டும் என்பதே மும்பையின் முன்னிருந்த ஒரே வாய்ப்பு. அது கடினமும் கூட.
நேற்று நடந்த போட்டில் மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு செல்லவில்லை என்றாலும், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இஷான் கிஷனின் சாதனைதான்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை அடித்து நொறுக்கினார்கள். அதிலும் தொடக்க ஆட்டக்காரராக வந்த இஷான் கிஷன் ஃபெளலர்களின் பந்துகளை தூக்கி அடித்து தெறிக்க விட்டார். வெறும் 16 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை எட்டினார் இஷான் கிஷன்.
இதுவரை மும்பை அணியின் வீரர் ஒருவர் குறைந்த பந்துகளில் அடித்த முதல் அரை சதம் இது. இதற்கு முன் இருந்தது 17 பந்துகளில் அரை சதம் எடுத்தது, அந்த சாதனைக்கு சொந்தகாரரும் இவர் தான், இவரும் பொலார்ட்டும் தான் 17 பந்துகளில் அரை சதம் எடுத்து சாதனையை பகிர்ந்து இருந்தார்கள். இப்போது அந்த சாதனையை தனக்கு மட்டுமே உரியதாக இஷான் கிஷன் மாற்றி இருக்கிறார்.
அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து மாலிக் பந்தில் அவுட்டானார்.
இந்த ஆட்டத்தில் மும்பை வென்றாலும், அதிக ரன்ரேட் பெறாததால் பிளேஆஃப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெறவில்லை.
– சே.கஸ்தூரிபாய்