பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

SHARE

‘நாங்கல்லாம் வேற மாதிரி…’ அப்டிங்குறத பாட்டாவே போட்டு நாள ஸ்டார்ட் பண்ணாங்க. நாலு பேர் வெளில ஆடினாங்க. நாலு பேர் படுக்கையிலேயே ஆடினாங்க. ஆனா பிரியங்கா புல்வெளில படுத்துக்கிட்டே டான்ஸ் ஆடினாங்க. பாவ்னியோட தமிழ் பேச்சு ரஜினி பேச்சு மாதிரி இருக்குன்னு, அவருக்கு ரஜினி டயலாக்லாம் சொல்லிக் குடுக்குறாரு சிபி. 

பிரியங்கா நாமளும் எதாவது பண்ணனுமேன்னு டெய்லி ஒரு டாஸ்க்னு  குடுக்குறாங்க. இன்னைக்கு நாம எல்லாரும் சீரியல்ல வர மாதிரி எமோஷன்ஸோட பேசலாம்ன்னு, ஆனா பாவம் அவங்கள யாரும் கண்டுக்கவே இல்லை. ஃபல்பு குடுத்துட்டாங்க ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும்…..

ஐக்கி தன்னோட வட்டாரத்துல இருக்குற மதுமிதாக்கு, சுருதிக்கு எல்லாம், shaken  style லாம் சொல்லிக் குடுக்குறாங்க. நம்ம இமான் அண்ணாச்சிக்கும், பிக் பாஸ பாத்து ’whats up man’ ன்னு கேட்க சொல்லிக்குடுக்குறாங்க. மத்தவங்களோட எப்படி மிங்கிள் ஆகுறதுன்னு பாக்குறாங்க போல. அதுக்கு ஸ்டெப் எடுக்குறது நல்ல விஷயம் தான். மத்தவங்க எல்லாம் அதுகூட செய்யல. 

டைன்னிங் டேபிள்ல, பிரியங்கா பாவ்னிக்கிட்ட ‘நானே சமைகுற‌தால சாப்பிட பிடிக்கலை’ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்டியே அபிஷேக்கையும் நல்லா வாரினாங்க. 

அபிஷேக் எல்லார் கூடவும் மிங்கிள் ஆக முயற்சி செய்யுற மாதிரிதான்  பிரியங்காகிட்டயும் மிங்கிள் ஆகணும்னு பார்த்தாரு. ஆனா அவருக்கு டிமிக்கி குடுத்துட்டு, பிரியங்கா இமான் அண்ணாச்சிகிட்ட, ‘அவன் எப்பவும் லூசு மாதிரிதான் பேசிட்டு இருப்பான். நீங்க யூடியூப்லாம் பாத்ததில்லையா?’ அப்டின்னு  கேட்டாங்க‌. இப்டி சொல்லிட்டு, தப்பா போயிடுமோன்னு அப்புறம் பல்டியும் ச்டிச்சாங்க, ‘அவன் வேலைக்காக அதுலா பண்றாருனு நினைக்குற, இங்க பாத்தா நல்லவன் மாதிரி தான் தெரியுறான்… பாப்போம்’ன்னு… 

பாத்திரம் கழுவுற டீம்ல நமீதா ஒரு கண்ணாடி பாத்திரம் உடைஞ்சிருக்குறத பாத்துட்டு பாத்திரம்லா தனியா வைங்கன்னு சொல்றாங்க. அது யார் உடைச்சதுன்னும் கேக்குறாங்க. யாருமே பதில் சொல்லல. ஆனா அந்த பாத்திரத்துல புளி கொஞ்சம் ஒட்டி இருந்ததால, ‘சின்னபொண்னு இப்பதான் ரசத்துக்கு புளி கரைச்சாங்க’ன்னு சொல்றாரு இமான் அண்ணாச்சி. 

ஆனா சின்னபொண்ணு, ‘ரசம் வெச்சது நான் தான் ஆனா அந்த கடாயில இருக்குற ரசத்த இந்த கண்ணாடி பாத்திரத்துல ஊத்துனது சிபி தம்பிதான்’னு சொன்னாங்க. ஆனா இத கேக்குறதுக்கு அங்க சிபி இல்ல, அவர் அப்போ குளிச்சிட்டு இருந்தாரு. இது எப்படியும் சனி ஞாயிறுல பஞ்சாயத்தா வரும்னு நினைக்குறேன். 

ராஜூ வருணுக்கு, அபிஷேக்குக்கு, நாடியாக்கு எல்லாம் சூர்ய நமஸ்காரம் சொல்லிக் கொடுத்தாரு. என்னடா இன்னும் பிக் பாஸ் டாஸ்க்கே குடுக்கலையேன்னு பாத்தா, அப்ப ச‌ரியா சிபிய கூப்பிட்டு ‘ஒரு கத சொல்லட்டுமா?’ டாஸ்க் குடுத்தாரு. 

ஒவ்வொருத்தவங்களும் தான் கடந்து வந்த பாதைகளைப் பத்தி சொல்லணும், மத்தவுங்க அதை கதையா பார்த்து தன் மனம் கவர்ந்த கதைக்கு லை, டிஸ்லைக்,  ஹார்ட், இமோஜி எல்லாம் கொடுக்கணும்-ன்னு பிக் பாஸ் சொன்னாரு.

இதற்கு முதல் பலி இசைவாணி. தன் குடும்ப பின்னணி, சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டது, வீட்டு வாடகை குடுக்க முடியாத காலத்துல வீடு வீடா மாறி அவமானப்படுத்தப்பட்டது – எல்லாம் சொன்னாங்க.

‘எனக்கு நிறைய ட்ரெஸ் போடனும்னு ஆச. ஆனா அப்போ எங்கிட்ட 2 ட்ரெஸ் தான் இருந்தது’ன்னு சொல்லி அழுத இசைவாணிக்காக தாமரையும், அபினய்யும் அழுதார்கள். ஆனா ஒருத்தர் அழ ஆரம்பிச்சா மத்தவங்களுக்கும் அழுகை வந்துடும்ன்ற மாதிரி எல்லாரும் கண்ண கசக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

‘பொண்ணுங்க எல்லாம் கானா பாடலாமானு கேட்டாங்க, ஆனா அது தான் என்ன தனியா காட்டுது. அதனாலதான் பிபிசி ல தேர்ந்தெடுக்கபட்ட 100 பெண்கள்ல இருக்குறேன்’னு சொல்லி முடிச்சாங்க.

அதுக்கு அப்புறம் இசைவாணியை தனியா சந்தித்து பேசிய ராஜூ, ‘ஏன் அழுதுக்கிட்டே பேசுற.. அழாம மாஸா சொல்லி இருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்’னு, அதுக்கு இசைவாணி, அந்த ஞாபக‌ம்லா வந்துடுச்சு அதான் அழுதுட்டேன்னு சொன்னாங்க… அதுவும் சரிதான். அவங்க எமோஷன்ஸ் அவங்க அனுபவிச்ச வலி அவங்களுக்கு தான் தெரியும். கதையா பாக்குறவங்களுக்கு அது கொஞ்சம் புரியாது. 

அப்படியே இருட்ட ஆரம்பிச்சுடுச்சு அபிஷேக் கூட, வருண், நிரூப், சிபி, உட்கார்ந்திருக்க, ‘உங்கள பத்தில்லாம் எனக்கு என்ன தோணுதுன்னா…’ அப்டின்னு அவரே ஒவ்வொருத்தரைப் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. ஆனா அவங்க யாரும் அபிஷேக் சொன்னத கண்டுக்கல. இப்படியே அவர்கூட அந்த வட்டாரத்தில் பலரும் சேர,  திடீர்ன்னு தன் அம்மாவை நினைத்து அழ ஆரம்பித்து விட்டார். 

‘என்னோட வாழ்க்கைய நினைச்சு அம்மா கஷ்டப்படுறாங்க, அப்பா இறந்தத நினைச்சு வருத்தப்பட்டு எதுலயும் ஈடுபாடு இல்லாம இருக்காங்க…’ அப்டின்னும், ‘நானே சில சமயம் என் அம்மாவ கஷ்டப்படுத்திட்டேன்’னும், அழ ஆரம்பிச்சிட்டாரு. ஒருவேளை வெளில இவர் பிக் பாஸ் பத்தி பேசுன அந்த வீடியோ வைரல் ஆனது தெரிஞ்சுடுச்சோ…

அடுத்து கத சொல்லட்டுமா டாஸ்க்குக்கு வந்தாங்க சின்னபொண்ணு. தன்னோட வறுமையையும், கலைக்காக படும் கஷ்டங்களையும் சொன்னாங்க. எல்லாரும் கைத்தட்டி, தங்களோட இமோஜிகளை சின்னபொண்ணுக்கு கொடுக்க, நம்ம கதாசிரியர் ராஜூ ‘கலைஞர்கள் கஷ்டத்தை காட்டக்கூடாது, வெளில எப்பவும் கெத்தா இருக்கணும், தடைகளை ஒடைச்சுதான் மேல வரணும், இன்னை அந்த தடைச் சுவரா என்ன நினைச்சுக்கோங்க, அப்டின்னு சின்னபொண்ணுக்கு டிஸ்லைக் கொடுத்தார் ராஜூ. எல்லாத்தையும் கதையா பாத்தா எப்படி கதாசிரியர் சார்…

இப்படியாக பிக்பாஸ் வீட்டில் 5ஆம் சீசனின் 2ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. செய்வதறியாது திகைத்த ஒன் பிளஸ் நிறுவனம்

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

Pamban Mu Prasanth

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

Leave a Comment