அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை 100% தேர்வு செய்ததற்காக அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி படத்தாள் கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும்,அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்