தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

SHARE

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜிம்பாப்வே அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் முதல், இரண்டாம் மற்றும் 3வது என குறிப்பிட்ட கால இடைவெளியில் வகை வகையாக தாக்குதலை நடத்தி வரும் கொரோனா தொற்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாடானது தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.

இதனால் ஜிம்பாப்வேயில் இந்தாண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தகுதியுடைய 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட சீனாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை விரட்டி அடிக்கும் முயற்சியாக தடுப்பூசி விவகாரத்தில் அந்நாட்டு அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது.

அதன்படி தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை. அதேசமயம் மற்றவர்களின் நலனுக்காக அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

ஒருவேளை தடுப்பூசி செலுத்துவதும், செலுத்தாததும் எங்கள் விருப்பம் என்று பேசினால் நீங்கள் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்வதே நல்லது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர்!

Admin

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

Leave a Comment