அக்.31 வரை அரசியல், மத நிகழ்வுகளுக்கு தடை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

SHARE

கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ளதால் திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்:

செப்டம்பர், அக்டோரில் கொரோனா 3ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும், தொற்று தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்வாதாரத்திற்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகள், சமூகம், மதக் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்க அனுமதி .

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தலைவர்களை சார்ந்த குடும்பத்தினர், பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தலா 5 பேர் உரிய அனுமதியுடன் விதிகளை பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

Leave a Comment