உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

SHARE

இந்தியாவிலுள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊடக செய்தியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இயங்கி வரும் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகசஸ் என்கிற மென்பொருள் வாயிலாக பல்வேறு நாடுகளிலுள்ள முக்கிய ஆட்களின் செல்போன் பேச்சுவார்த்தை, புகைப்படங்கள், உள்ளிட்ட வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக திடீர் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ்’ என்று செய்தி நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ‘தி வையர்’ செய்தி நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்க்டன் போஸ்ட், தி காரிடியன் உள்ளிட்ட 17 செய்தி நிறுவனங்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளன.

அந்த ஆய்வில் இந்தியா, சவுதி அரேபியா, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ஐக்கிய அரபு, எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன் எணிகள் இருந்ததாக வையர் ஊடகம் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்கட்சித் தலைவர்கள், 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், ஒரு நீதிபதி ஆகியோருடைய எணிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட நாட்டின் பல்வேறு சமூக ஆர்வலர்களுடைய செல்போன் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் மென்பொருள் நிறுவனம் தங்கள் தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளுடைய அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாத செயல் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

ஏன் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கலை தெரியுமா? அமெரிக்கா விளக்கம்!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – திணறும் தீயணைப்பு படை வீரர்கள்

Admin

Leave a Comment