இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் குழந்தை மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
லெக்ஸி ராபின்ஸ் என பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்த சில நாட்களில் கை விரல்களில் அசைவின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்த அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துள்ளனர்.
இதில் அக்குழந்தை ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (FOP) எனும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோரை இன்னொரு தகவலும் துன்பத்திற்குள்ளாக்கியது.
20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய இந்த FOP நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உடலில் உள்ள தோல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறும் என்றும் இவர்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும், சிகிச்சையும் கிடையாது. அதேபோல் இந்த குழந்தை வளர்ந்தபின் குழந்தை பெற்றெடுக்கவும் முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.