நடந்து முடிந்த தமிழக பேரவைத் தேர்தலுக்கான சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில், முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிவடைந்தபோது தமிழகமெங்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 445 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன.
முன்னதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பறக்கும் படைகள் 130.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் இப்போது கைப்பற்றப்பட்டவையின் மதிப்பு 340% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- நமது நிருபர்.