பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 போக்சோ வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது செய்த சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.