பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சி ரூ.30.80 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியானது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது.
இதுவரை மன் கி பாத்’தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது, இந்த நிலையில் மனகிபாத் ஈட்டியுள்ள வருமானம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மன்கிபாத் வருமானம்:
மன்கிபாத் மூலம் 2014-15 ல் – ரூ 1.16 கோடி
2015-16 ஆம் ஆண்டில் – ரூ 2.81 கோடி
2016-17 ல் ரூ 5.14 கோடியும் , 2017-18 ஆம் ஆண்டில் ரூ 10.64 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டது .
2018-19- ல் ரூ 7.47 கோடி வருமானத்தையும் , 2019-20- ல் ரூ 2.56 கோடியையும் , 2020-21 ல் ரூ 1.02 கோடியையும் வருமானமாக ஈட்டியது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இது பார் கவுனிசில் அளவின்படி மன்கிபாத் 2018 முதல் 2020 வரை ஆறு கோடி முதல் 14.35 கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.