மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனைதொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் 2 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்