கூகுள் இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது. அதே சமயம் கூகுளில் வெளியாகும் சில செய்திகள் இணைய வாசிகளை கொந்தளிக்கவும் செய்வது உண்டு.
அந்த வகையில்இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன? – என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடிய போது அதற்கு பதில் கன்னடம் எனவந்துள்ள செய்தியால் கோபமான கன்னட மக்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
கன்னட மக்களோடு கர்நாடக அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தனர். இது குறித்து பேசிய கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி இதற்கு கண்டனம் தெரிவித்தோடு கூகுள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையானதால் கூகுள் நிறுவனம் தற்போதுமன்னிப்பு கோரியுள்ளது. கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு வருந்துவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. அத்துடன் கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடுதளத்தில் வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
- மூவேந்தன்