சாக்லேட் குறித்த ரகசியங்கள்..! – உலக சாக்லேட் தின சிறப்புக் கட்டுரை.

SHARE

சாக்லேட்…  சிறியவர், பெரியவர் என்ற வரையறை இல்லாமல் அனைவருக்கும் பிடித்தது. சாக்லேட் என்று சொன்னாலே நமக்குள் தனி உற்சாகமும், மகிழ்ச்சியும் பிறக்கும். 

சாக்லேட் பற்றிய சில இனிப்பான தகவல்கள்….

1.சாக்லேட் என்ற வார்த்தை மெக்ஸிக்கோ மாகாணத்தில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவானது.

2.உலக சாக்லேட் தினம் என்ற ஒன்று, 2009 ஆண்டில் இருந்துதான் உலக அளவில் கொண்டாடப்படுகிறது.  1550 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் நாள் தான் ஐரோப்பாவிற்கு சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

3.சாக்லேட்டுகள் கொக்கொ பீன்ஸ் என்ற  மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தின் விதைகளில் இருந்து  தயாரிக்கப்படுகிறது. ஒரு கொக்கொ பழத்தில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும்.

4.முதன் முதலில் சாக்லேட்டை பானமாகவே தயாரிக்கபட்டது. அதன் சுவையும் சற்று கசப்பாகவே இருந்தது.  இருப்பினும் இதை குடிப்பவருக்கு உற்சாகமும், வலிமையும் தரும் என நம்பினார்கள்.

5. நாளடைவில் சாக்லேட்டுடன் சர்க்கரை, வெண்ணிலா, பட்டை போன்ற பொருட்களின் கலவையினால் இன்று உலகம் முழுக்க விரும்பி சாப்பிடும் இனிப்பாகிவிட்டது.

6.சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் உற்சாகத்தின் முக்கிய காரணம், serotonin என்ற வேதிப்பொருள் சுரப்பதால் தான். இதே செரோடோனின் பிறரை கட்டிப்பிடிப்பதால் கூட சுரக்கும் என்பது  மிக முக்கிய குறிப்பு. 

7. சாக்லேட் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறையும், இதயம் சீராக செயல்படும், குறிப்பாக டார்க் சாக்லேட்டில் உள்ள ஆண்டாக்ஸிடண்ட், சருமத்தை பாதுகாக்கும், இதய பாதிப்புகளை குறைக்கும், மூளைக்கு வலிமை தரும், உடல் எடையை குறைக்கும், புற்று நோய் செல்களை கட்டுபடுத்தும், ஆயுளையும் கூட்டும்.

சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று விவாதம் இருப்பினும்

இவ்வளவு நன்மைகளுடன், நமக்கு பிடித்த சுவையில், வித விதமான வடிவங்களிலும், நிறங்களிலும் கிடைக்க கூடிய சாக்லேட்டை அளவோடு சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.

  • செ.கஸ்தூரி பாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

வனங்களின் காவலன் .. கம்பீரத்தின் அடையாளம் ஆனால் இன்று?

Admin

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

Leave a Comment