மனிதன் விளைவித்த முதல் பயிர் எது?

SHARE

மனிதர்கள் வேட்டையாடிகள் என்பதில் இருந்து விவசாயிகளாக மாறியது வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று!. அப்படியாக மனிதன் விவசாயம் செய்து உருவாக்கிய முதல் பயிர் எது?.

பழைய ஏற்பாட்டை வரலாறு என்று நம்பிய ஐரோப்பியர்கள் ஆப்பிள்தான் உலகின் மிக மூத்த விவசாயப் பயிர் எனக் கருதினர். ஆனால் ஆய்வுகளின்படி கி.மு.8000ஆவது ஆண்டுக்கு முன்பு ஆப்பிள் உருவாகியே இருக்கவில்லை!. கஜகஸ்தானில் உள்ள தீன் ஷான் மலைப்பகுதியில் கி.மு.8000ஆவது ஆண்டு வாக்கில்தான் ஆப்பிள் உருவாகியே இருக்கிறது!. ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே விவசாயம் தொடங்கிவிட்டது.

சுமார் 1லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் காட்டில் விளைந்த தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இது வேட்டையாடுதலைவிட எளிமையானதாக இருந்தது. ஆனால் அந்த தானியங்களை அவனே விதைத்து, அறுக்க ஆரம்பித்தது சுமார் கி.மு.11500ஆம் ஆண்டுவாக்கில்தான். 

உலகின் எந்தப் பகுதியில் விவசாயம் முதன்முறையாகத் தொடங்கியது என்பது தெரியவில்லை. உலகின் 11 வெவ்வேறு இடங்களில் ஆதிகால விவசாயத்திற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன. தெற்கு சீனா, நியூகினியா தீவு, அமெரிக்கா – உள்ளிட்ட இடங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் விவசாயம் கி.மு.7000ஆவது ஆண்டில் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன. அகழாய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் இந்த முடிவுகள் மாறக் கூடும்.

கி.மு.11500களில் தொடங்கி அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு விவசாயம் செய்த கற்கால மனிதர்கள் 8 பிரதான பயிர்களை விவசாயம் செய்தார்கள். அவை எம்மர் கோதுமை, என்கான் கோதுமை, தோல்நீக்கிய பார்லி, பட்டாணி, அவரையினங்கள், துவரை, சணல் – ஆகியவை. இந்த 8 வகைப் பயிர்கள்தான் ‘கற்காலப் பயிர்கள்’ என்று ஐரோப்பிய ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றன. இதே காலகட்டத்தில் சீனாவில் மட்டும் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அதனால் நெல்லும் கற்காலப் பயிர்தான். இந்த 9 பயிர்களைத்தான் சுட்டும் சுடாமலும் ஆதி மனிதன் சாப்பிட்டு இருக்கிறான். அவைதான் மனிதன் விவசாயத்தின் மூலம் உருவாக்கிய முதல் உணவுப் பொருட்கள்.

இந்த 9 கற்காலப் பயிர்களில் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட அவரை இனங்கள் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. எளிதாக தோட்டத்தில் முளைக்கக் கூடியவை என்பதால் இவைதான் மிக அதிக பரப்பில் வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்டு இருக்கின்றன. பிரதான தோட்டப் பயிர் என்று இதனைச் சொல்லலாம். உலகில் அவரைச் செடி விவசாயம் முதன்முதலாக நடந்த இடம் ஆப்கானிஸ்தானுக்கும் இமய மலைக்கும் இடைப்பட்ட நிலம்தான் என்று வரலாறு சொல்கிறது. அந்த வகையில் இந்தியா உலகுக்குக் கொடுத்த கொடைகளில் ஒன்றாக அவரையை சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்றைக்கு ஆம்லெட்டில் வேங்காயம் சேர்க்கிறோமே… அப்படியாக அசைவத்தோடு இணைத்து சாப்பிடப்பட்ட முதல் சைவ உணவும் பீன்ஸ்தான். கி.மு.8000ஆம் ஆண்டு வாக்கிலேயே உலகெங்கும் பல்வேறு வகைகளில், வடிவங்களில் பீன்ஸ் உருவாகிவிட்டது. நாம் விரும்பிச் சாப்பிடும் கொண்டைக் கடலைகூட ஒருவகை பீன்சின் விதைதான்!. இது கி.மு.3500களில் உருவானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது!. 

இந்த 9 பயிர்களில் எது மிக மூததது? – என்று பார்த்தால், கிடைத்த தொல்லியல் சான்றுகளின்படி கி.மு.11,500ஆம் ஆண்டில் சீனாவில் நெல் விளைந்து இருக்கிறது. ஆனால் கோதுமையின் தடயங்கள் கி.மு.8000ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் கிடைக்கின்றன!. 

அந்த வகையில் உலகின் மிகத் தொன்மையான விவசாயப் பயிரான நெல்லை பிரதானமாக உண்ணும் மனித இனங்களில் தமிழர்கள் தனி இடம் பெறுகின்றனர். தமிழகத்தில் சங்க காலத்தில்கூட நெல்லே பிரதான உணவுப் பொருளாக இருந்துள்ளது.

கோதுமைக்கு சிறப்பான இடம் கிடைக்காததாலோ என்னவோ, உலகின் மிக மூத்த விவசாயப் பயிர் குறித்து மேற்கத்திய உலகம் அதிகம் ஆய்வு செய்யவில்லை!. தமிழகத்தில் முறையான தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டால், சீனாவுக்கு சம காலத்தில் தமிழகத்திலும் விவசாயம் நடந்ததற்கான சான்றுகள் கிடைக்கக்கூடும்!.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

சே குவேரா எனும் புரட்சித் தீ! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

கலைஞரின் பொற்கால ஆட்சியின் பொன்னான திட்டங்கள் – ஓர் பார்வை

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

Leave a Comment